அ . அச்சுதன் )
திருகோணமலை மாவட்டத்தில் பெய்யும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான தாழ்நிலங்கள், வீடுகள் , வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை – சீனக்குடா வீதியில் இன்று அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன. சேருவில – செல்வநகர் வீதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை நகரில் மரங்கள் முறிந்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் க. செல்வராஜா (சுப்ரா) மழை நீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார் மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களும், உத்தியோகத்தர்களும் மரங்களை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் பெய்துவரும் கடும் மழையால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் வடிந்தோடும் பணிகளை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். பிரகலாதன் தலைமையில் வடிந்தோடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


