அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில், தேவாலயத்திற்கு அருகாமையில், இன்று இரவு 2 மணியளவில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்று அழுத்தத்தால் பாரிய மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டு, மின்சாரம் தடைப்பட்டு பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது.

இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன், தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்களின் உடனடி பணிப்புரைக்கிணங்க, அக்கரைப்பற்று மாநகர பிரதி முதல்வர் யூ.எல். உவைஸ், மாநகர சபை உறுப்பினர்கள் ஏ. கே. பாஹிம், நுஃமான், ஹனீப், அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்பு பிரிவு, மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், இவர்களுடன் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர், அக்கரைப்பற்று மின்சார சபையினர், அக்கரைப்பற்று பொலிஸார், பொதுமக்கள் என அனைவரும் நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை இணைந்து செயல்பட்டு, மரத்தை அகற்றி, வீதி போக்குவரத்து மற்றும் மின்சாரம் மீள செயல்படுத்தும் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

இது போன்ற அவசர நிலைகளில் மக்கள் நலனுக்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்ட இந்த நிகழ்வு, மாநகர செயற்பாட்டின் ஒரு முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுகிறது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL