தாண்டியடி விளையாட்டு மைதானத்தில் இம் முறை மாவீரர் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு வவுணதீவு தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாடுகள் தாண்டியடி துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினால் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தாண்டியடி துயிலுமில்ல அமைந்துள்ள பூமியில் விசேட அதிரடிப்படை முகாம் இருப்பதன் காரணமாக இத்தனை காலமும் தாண்டியடி முருகன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள வளாகத்தில் குறித்த மாவீரர் தின அனுஸ்டிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இப்பகுதி மிகவும் நெருக்கமா இருப்பதன் காரணமாக மாவீர்ர் அஞ்சலிக்காக வருகை தரும் உறவுகள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றதின் பின் இவ்வருடம் கடந்த காலங்களை விட அதிகமான உறவுகளின் வருகை எதிர்பார்க்கப்படுவதைக் கருத்திற்கொண்டு தாண்டியடி விளையாட்டு மைதானத்தில் குறித்த நிகழ்வை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

குறித்த விடயம் மக்களுக்கு அறியப்படுத்தும் விதமாக மாவீரர் துயிலுமில்ல வரவேற்பு பதாகை இன்றைய தினம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயற்பாட்டின் பின்னர் தொடர்ந்து மாவீரர் தின அனுஸ்டிப்புக்கான அலங்கார ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.