எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
விஷ போதைப் பொருட்களை இல்லாதொழிக்கும் ” முழு நாடும் ஒன்றாக ” எனும் தொனிப்பொருளிலான தேசிய செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (30) பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலுடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி லக்ஷனியா பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளப்பட்டதுடன், இந் நிகழ்வில் கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை தேசிய நிகழ்வு திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் விஷ போதைப்பொருள் உற்பத்தி, விநியோகம், விற்பனை, ஊக்குவிப்பு மற்றும் அவற்றிற்கு உடந்தையாக இருத்தலை முற்றுமுழுதாக நிராகரித்தல், எதிர்த்தல் மற்றும் அதனுடன் தொடர்பான நபர்களை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுத்தல் அவசியம் என்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயல்படுவோம் என உதவிப் பிரதேச செயலாளர் வலியுறுத்தினார்.


