விமான நிலைய விஸ்தரிப்பின் போது உள்வாங்கப்பட்ட வீதிக்கான மாற்று வீதியினை மிக விரைவாக புனரமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பணிப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

விமான நிலைய விஸ்தரிப்பின் போது உள்வாங்கப்பட்ட வீதிக்கான மாற்று வீதியினை அமைப்பதற்கான காணியை விமான படை காணியில் இருந்து ஒதுக்கிக் கொள்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், விமானப்படையின் உயர் அதிகாரி, மாவட்ட செயலக காணி உத்தியோகத்தர், மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட விடயத்துடன் சம்மந்தப்பட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்ததுடன், மிக விரைவாக குறித்த வீதிக்கான காணியை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, மாநகர சபையின் ஊடாக குறித்த வீதியை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பாராளு மன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.