எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வங்காள விரிகுடாவில்இ தீவின் வடகிழக்கில் “மோந்தா” சூறாவளி புயல் இன்று அக்டோபர் 28, 2025 அன்று அதிகாலை 2.30 மணிக்கு, முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கி.மீ தொலைவில் அகலாங்கு 14.4°வடக்கு மற்றும் நெட்டாங்கு 83.3°கிழக்கு அருகே மையம் கொண்டுள்ளது.
இது கிட்டத்தட்ட வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்து இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.
கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அடுத்த 24 மணி நேரத்தில் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்குச் செல்லும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கீழே உள்ள வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் (70-80) கி.மீ. வரை அதிகரிக்கும், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும், மேலும் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும்.



