எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சிறந்த ஊடகவியலாளருக்கான கிழக்கு மாகாண இலக்கிய இளம் கலைஞர் விருது – 2025 விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் பாராட்டு நிகழ்வு சவளக்கடை கிரீன் கார்டனில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
ஏ.ஆர்.எம்.நண்பர்கள் குழுவினரில் ஏற்பாட்டில், அதிபர் எம்.எல்.எம். நிஹாருதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உயரிய விருதான சிறந்த ஊடகவியலாளருக்கான கிழக்கு மாகாண இலக்கிய இளம் கலைஞர் விருது – 2025 விருதைப் பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் “வாழ்த்துப்பா” வுடன், மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
பகல் போசனத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வை சிரேஷ்ட அறிவிப்பாளர் யூனுஸ்.கே.ரகுமான், றம்சானா சமீல் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


