மட்டக்களப்பில் மாணவ தூதுவர் மாவட்ட மாநாடு 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் வருடாந்த மாவட்ட மட்ட மாணவர் தூதுவர் மாநாடானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஷா ரியாய் எற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) இடம் பெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மாவட்ட செயலகம் இணைந்து சிறுவர் பாதுகாப்பு குறித்த மாணவர் தூதுவர் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

நாட்டின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பாதுகாப்பு திட்டங்களுக்கான முடிவெடுப்புகளில் பாடசாலை மட்டத்தில் சிறுவர்களின் பங்கேற்ப உறுதிப்படுத்தும் நோக்கமாக் கொண்டு மாவட்ட மட்ட மாநாடு இடம் பெருகின்றது.

இதன் போது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாணவர் தலைவர்களின் முறைசார் ஈடுபாட்டுடன் மாணவர் தூதுவர் திட்டத்தை நடத்துவதில் உள்ள சவால்கள், பாடசாலை மட்டத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்து தீர்வுகளைப் பெறுவதை அடிப்டையாகக் கொண்டு இவ் மாவட்ட நாடு அனைத்து மாவட்டங்களிலும் இடம் பெறுகின்றன.

இந் நிகழ்வில் உளநள வைத்திய நிபுணர் கே.கமல்ராஜ், சமூகம் சார் குழந்தை நல வைத்திய நிபுணர் கே.பிரார்த்தனா, உதவி கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் அ.பிரபாகர், சிறுவர் பெண்கள் பிரிவின் பொலிஸ் அதிகாரி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன் துறை சார் நிபுணர்களினால் அவற்றுக்கான ஆலேசனைகள் மற்றும் பிரச்சினைகளை கையால்வதற்கான உபாய முறைகள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.