பாசிக்குடாவில் Wings of East கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பன்மைத்துவ கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி பாசிக்குடா சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு அண்மையில் (17 மாலை) நடைபெற்றது.

கிழக்குமாகாண ஆளுனர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு, கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம், கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் சு. சுதாகரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலர் பங்குபற்றினர்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு நேற்றும் (18) இன்றும் (19) 2 தினங்களில் காலை 08.30 – மாலை 08.30 வரை பல்வேறு உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாலை வேளைகளில் பல்வேறு கலை நிகழ்வுகளும் கலாச்சாரத் திணைக்களத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.