ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் இடம்பெற்ற தீபாவளி விசேட பூஜை!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

தீபாளியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் இன்று காலை விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றது.

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் தலைமையில் பூசை வழிபாடுகள் இடம் பெற்றது.

குறித்த விசேட பூசை வழிபாடுகளில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியரும், ராமகிருஷ்ண மடத்தின் துறவியுமான ஸ்ரீமத் சுவாமி அபவர்கானந்தஜி மஹராஜ் அவர்களும் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.