ஜின்னா ஞாபகார்த்த சாம்பியன் கிண்ணத்தை தனதாய்க்கிக் கொண்டது ஜமாலியா விளையாட்டு கழகம்.

ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை,ஜின்னா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த தமது கழக வீரர்களை நினைவுபடுத்தும் முகமாக இரண்டு நாள் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி கடந்த ஒக்டோபர் மாதம்18/ 19ஆம் திகதி 2025 ஆண்டு ஜின்னா நகர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 30 அணிகள் கலந்து கொண்டிருந்தன .
இறுதி போட்டிக்காக ஜமாலியா விளையாட்டு கழகம் மற்றும் ரிங்கோ ஸ்டார் கழகம் தேர்வு செய்யப்பட்டன .
இறுதிப் போட்டியில் பலப்பரீட்சையின் போது இரு அணிகளும் எவ்வித கோல்கள் போடாத நிலையில் போட்டி சமநிலையில் முடிந்த பின்னர் தண்டு உதை மூலம் 7-6 என்ற கோல் வித்தியாசத்தில் ஜமாலியா விளையாட்டு கழகம் ரிக்கோ ஸ்டார் கழகத்தை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. சுற்றுப்போட்டி யின் சிறந்த கோல்காப்பாளராக என்.நப்ரீஸ் தெரிவு செய்யப்பட்டார் என ஜமாலியா விளையாட்டு கழகத்தின் பொருளாளர் மு.மு.முஹமட் முக்தார் தெரிவித்தார்.