ஒரு குடம் கண்ணீர் – வாசிப்பனுபவப் பகிர்வு

பன்னூலாசிரியரும் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய “ஒரு குடம் கண்ணீர்” நூல் வாசிப்பனுபவப் பகிர்வும் மீளறிமுகமும் எதிர்வரும் 26.10.2025 அன்று ஞாயிற்றுக் கிழமை பி.ப. நான்கு மணிக்கு கொழும்பு – 12, பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பாத்திமா மகளிர் கல்லூரி மண்டபவத்தில் நடைபெறவுள்ளது.
டாக்டர் முனீர் அபூபக்கர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கொலன்னாவ பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரும் கொலன்னாவ பள்ளிவாசல் நிர்வாகத்தின் செயலாளருமான அல்ஹாஜ் எம்.ஜே. பெரோஸ் முகம்மத் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிப்பார்
முதல் பிரதியை அக்பர் பிரதர்ஸ் சந்தைப் படுத்தல் முகாமையாளர் இன்ஷாப்டீன் அவர்கள் பெற்றுக் கொள்வார்.
இலங்கைத் திறந்த பல்கலைக் கழக விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான திருமதி தேவகௌரி மகாலிங்க சிவம், இளைஞர் பயிற்றுவிப்பாளரும் பௌதிகவியல் ஆசிரியரான ஹூஸ்னி ஜாபிர், பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் உபசெயலாளர் திருமதி ஷஹாமா ஸனீர் ஆகியோர் நூல் வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
கௌரவ அதிதிகளாக கவிஞர் தர்ஹா நகர் ஸபா, அல்ஹாஜ் எம்.டி.எம் மிஹான், அல்ஹாஜ் நபீல் ஹம்ஸா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திருமதி ஸொஹறா புகாரி, ஆசிரியை திருமதி ஷர்மிளா இஸ்மாயில் ஆகியோர் பங்கு கொள்வார்கள்.
இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் திருமதி ஆஷிகா பர்ஸான் வரவேற்புரை நிகழ்த்த கவிஞர் ஸிமாறா அலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.
விழா ஏற்பாடு – இம்ரான் நெய்னார்