எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைக்கப்பட்ட ஜீவகம் முன்பள்ளி, இன்று (15.10.2025) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஹேமாஸ் நிறுவனம் வழங்கிய நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட இம்முன்பள்ளியின் அங்குரார்ப்பண நிகழ்வில், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல சமூகநலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு சிறுவர் கல்வி மேம்பாட்டிற்கான இன்னொரு முக்கிய முன்னேற்றமாக அமைந்தது.


