(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பொத்துவில் பிரதேச மக்களுக்கு குடியிருப்பு காணி அனுமதி பத்திரம் நேற்று (15) வழங்கி வைக்கப்பட்டது
பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. அஹமட் நஷீல் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற
இந்நிகழ்வில், 106 பேருக்கான குடியிருப்பு காணி அனுமதிப்பத்திரம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும்,கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித், பொத்துவில் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஆதம் சலீம், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான மஹ்ரூப் மற்றும் புனிதன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆரிப், நிந்தவூர் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் சதாத் மற்றும் சஹாப்தீன் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


