தொழிலதிபர் அஹமது அனிபா அர்ஷாட்க்கு தொழிலதிபர் 2025 உயர் விருது

பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் அல்மாஸ் ஜுவல்லரி நகையகம் மற்றும் அல்மாஸ் பெஷன் ஆடையகம் போன்றவற்றின் உரிமையாளர் இளம் தொழில் அதிபரும், பிரபல சமூக சேவகருமான அஹமது அனிபா அர்ஷாட் ( Ahamathu Aneefa ARSAD ) மக்களின் நம்பிக்கையினை வென்ற இவருக்கு international World Record of Asia Award அமைப்பினால் தொழிலதிபர் -2025 எனும் உயர் விருதினை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்டார்.

இவர் சமூக சேவை செயற்பாடுகளில் அதீத அக்கறையுடன் பணியாற்றி வருகின்றவர் . மின்மினி மீட்சி சமூக, பொருளாதார, கல்வி,அபிவிருத்திக்கான அரச சார்பற்ற அமைப்பின் ஆலோசகராகவும், சம்மாந்துறை நகையக வர்த்தக சங்கத்தின் அங்கத்தவராகவும், கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி(தேசிய பாடசாலை)யின் அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் உயர் சபை பிரதிநிதியாகவும் செயற்பட்டு வருகிறார்.

இவர் இலங்கை- இந்திய நற்புறவு ஒன்றியத்தினுடாக TOP-100 AWARD -2025 சிறந்த தொழிலதிபருக்கான பதக்கம் அணிவித்து, பொன்னாடை போர்த்தி ,விருதும், விருதுப் பத்திரமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு: தமிழ் Letter ஊடக அமைப்பினால் “நம்பிக்கைக்குரிய இளம் தொழில் முயற்சியாளருக்கான விருதும், பொன்னாடை, பதக்கம்,விருது, சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டவராவார்.