எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் வழிகாட்டலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு இன்று (13) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், கணக்காளர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், ஸீப்ரா, என் ஜி ஆர், நியூ கோல்ட், ஆரையூர், விபுலாநந்தா, இழவேனி ஆகிய விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.


