அரசின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் பொத்துவில் பிரதேசத்தில் இதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் (02) நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், லகுகல பிரதேச சபையின் உதவி தவிசாளர் ரவிந்திர குணவர்தன, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம். முஷர்ரப், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.டீ. அஹமட் நசீல், கிழக்கு மாகாண கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் எம். துலஷிதாஸன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் ஆதம்சலீம், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான புனிதன் மற்றும் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள்,
பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த இத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் முன்மொழிவுக்கு அமைவாக கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.