தீகவாபி பிரதேச விவசாயிகளின் நீண்ட நாள் தேவையான 4 வான்கதவுகள் கொண்ட துரிசு, அணைக்கட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தீகவாபி பிரதேச விவசாயிகளின் நீண்ட நாள் தேவையான 4 வான்கதவுகள் கொண்ட துரிசு, அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று முன்தினம் (01) புதன்கிழமை ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.

கடந்த வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தீகவாபி பிரதேச விவசாயிகளுக்கு 12 மில்லியன் ரூபா நிதியில் இவ்வணைக்கட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த அபிவிருத்திக்கான ஆரம்ப வைபவம் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் கலந்து கொண்டு இவ்வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன்மூலமாக தீகவாபி, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேச விவசாயிகள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் சமன், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினருடைய இணைப்புச் செயலாளர் ஆசிரியர் ஆரிப், தீகவாபி பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் முயற்சியினால் இதனைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து 12 மில்லியன் ரூபா நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளமைக்காக அரசாங்கத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கும் பொதுமக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.