தம்பலகாமம் பிரதேச செயலக வாணி விழா

திருகோணமலை ,தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா இன்று (30)இடம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த வாணி விழா நிகழ்வில் விசேட பூஜை வைபவங்களும் இடம் பெற்றன.
இதில் பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் நாடக அரங்கேற்றலும் இடம் பெற்றன.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.