வாழைச்சேனை
மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த கலாபூசனசனம் கவிஞர் முத்துமாதவனின் ‘வேரை மறந்த விழுதுகள்’ எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா நேற்று மாலை (28) கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கான அனுசரனையை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியிருந்தது.இது அவரது 3 ஆவது நூலாகும்
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் கலந்து கொண்டார்.சிறப்பு அதிதியாக கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் சி.சிவநேசராசா மற்றும் பிரதேசத்தின் சமூக சேவையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதிதிகள் யாவரும் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.மங்கள விளக்கேற்றலுடன் மௌன இறை வணக்கத்தினை தொடந்து தமிழ் மொழி வாழ்த்து ஆசியுரை மற்றும் வரவேற்புரை என்பன இடம்பெற்று நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின.
ஆசியுரையை சிவஸ்ரீ கண்ணன் குருக்கள் நிகழ்த்தினார்.வரவேற்புரையை ந.காண்டீபன் நிகழத்தினார்.சிறப்புரையை உழைக்கும் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைப்பாளரும் ராவையா பத்திரிகையின் ஊடகவியலாளருமான த.நடராசா நிகழ்;த்தினார்.நூல் அறிமுகவுரையை தமிழ் ஆசிரிய ஆலோசகர் எ.ஜெயரஞ்சித் நிகழ்த்தினார்.நூல் ஆய்வினை கிரான் மத்திய கல்லூரி ஆசிரியர் பாரதி சாஜகான் நிகழ்த்தினாhர்.நூலின் முதல் பிரதியினை த.சதானந்தன் பெற்றுக் கொண்டார்.நிகழ்வின் இறுதியில் நூலசிரியரினால் ஏற்புரை வழங்கப்பட்டு லா.தவசுதனின் நன்றியுரையுடன் ‘வேரை மறந்த விழுதுகள்’ எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா இனிதே நிறைவடைந்தது.
28.09.2025. 0771607517


