*சிரேஷ்ட ஊடகவியலாளர் எச்.எம். ஹலால்தீன் க்கு தேசிய ஊடக விருது வழங்கப்பட்டது*

ஹஸ்பர் ஏ.எச்_

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30 ஆவது வருடாந்த மாநாட்டின் போது தேசிய விருது வழங்கி கவனிக்கப்பட்டார்.

தேசிய ரீதியாக ஊடகத் துறைக்காற்றிய பங்களிப்புக்காக திருகோணாமலை மாவட்டத்திலிருந்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வானது 2025.09.27 ஆம் திகதி சனிக்கிழமைக் காலை 9:00 மணிக்கு , இலக்கம் 310, டி ஆர் விஜயவர்தன மாவத்தை கொழும்பு – 10 இல் உள்ள இலங்கை தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும்,சிரேஷ்ட ஊடகவியலாருமான கலா பூசணும் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையின் கீழ் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ எம்.பி. பிரதம அதிதியாகவும், இலங்கைக்கான சவுதி அரேபியா தூதுவர் ஹாலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கௌரவ அதிதியாகவும், விசேட அகதிகளாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், அரச ஹஜ் குழு தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமத், ராயல் கிங்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் தலைவர் எஸ் எஸ் ராஜுதீன், ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணாமலை மாவட்டத்தின் சிறந்த ஊடகவியலா ளராகாகத் தெரிவு செய்யப்பட்டு இவருக்கு பொன்னாடை, பணப்பரசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர் 1991 ஆம் ஆண்டு பேராதனை ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறையை சிற சிறப்பு துறையாக தேர்ந்தெடுத்து பட்டம் பெற்ற பின்னர்.

2004 ஆம் ஆண்டில் அதே பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலை எம்.ஏ பட்டமும் பெற்றார்.

கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் சுமார் 8 வருடங்கள் தமிழ் மொழி ஆசிரிய ஆலோசராக பணியாற்றினார். தற்பொழுது கிண்ணிய அல்/மினா மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழிப் பாட ஆசிரியராக பணிபுரிகின்றார்.

1996 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையின் கிண்ணியா நிருபராக நியமிக்கப்பட்டார். விடிவெள்ளி, சுடரொளி, நவமணி, முதலான பத்திரிகை களின் செய்தியாளராக செயல்பட்டு வருகின்றனர்.

2000 ஆம் ஆண்டு சக்தி எஃ.எப். கிண்ணியா பிராந்திய செய்தியாளராகவும், 2009 ஆம் ஆண்டு முதல் சக்தி டிவியின் கிண்ணியா பிராந்திய செய்தியாளராகவும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகின்றார்.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் அமைச்சினால் ‘இலக்கிய வித்தகர்’ விருது பெற்றார்.

இவர் திருகோணமலை மீடியா போரம் மற்றும் கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் தலைவராகவும், அகில இலங்கை சமாதான நீதிவானா கவும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் பல கட்டுரைகளையும், சிறுகதைகளையும், கவிதைகளையும் படைத்துள்ளதோடு இன்றும் சக்தி டிவி, வீரகேசரி பத்திரிகையாளராக செயல்பட்டு வருகின்றார்.