ருத்திரன்
தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு மாவெடிம்பில் இன்று (26) நினைவு கூறப்பட்டது.
மட்டக்களப்பு மாவெடிவெம்பு தாயகச் செயலணியினரால் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இதன்போது மாவிரர் ஒருவரின் தாயாரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி மௌன இறைவணக்கம் செலுத்தினர்.நிகழ்வவில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மற்றும் ஏறாவூபற்று பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன் ஆகியோர்கள் நினைவு பேருரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினார்கள் தயாகச செயலணியின் ஏற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்


