மாணவர் பொல்லடிக் கலைஞர்களுக்கு கௌரவம்

Oplus_131072

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

அல்-மீஸான் பௌண்டசனின் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வருடாந்தப் பரிசளிப்பு நிகழ்வும் பேர்ல்ஸ் சீஸன் 04 கௌரவிப்பும் விழாவும் பௌண்டசனின் தவிசாளரும் ஊடகவியலாளருமான யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற வேளை, பொல்லடி எனும் (களிகம்பு) கலையை திறமையாக வெளிக்காட்டியமைக்காக சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை மற்றும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவர் பொல்லடிக் கலைஞர்கள் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான சான்றிதழ்கள் அல்ஹிலால் பாடசாலையின் அதிபர் எம்.எச். நுஸ்ரத் பேகத்தினாலும் கல்முனை சாஹிராவின் விளையாட்டு மற்றும் கலைக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.ஐ.எம். அமீரினாலும் பாடசாலையில் வைத்து வழங்கி, நேற்றுமுன்தினம் (24) புதன் கிழமை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

அதன்படி, சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களான எம்.எம்.எம். சல்பி, என்.எம். நப்லான், எம்.எம்.றினாஸ், என்.எம்.அப்றி, எம்.ஏ. ஆபித், ஆர். கம்ரான் அஹ்மத், எம்.என்.எம். மாயிஸ், ஏ.எம்.அஹ்திர், எப்.எம். ஹிஷாம், ஜே.எம். அவ்பீக் ஆகியோரும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மாணவர்களான ஆர்.எம். றிவி, எஸ்.எல்.எம். ஹாதீம், எஸ்.எம். ஸராப் மற்றும் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் பாடசாலை மாணவன் எஸ்.எம்.அஸ்வி ஆகிய மாணவர்கள் உட்பட மறுகி வரும் முஸ்லிம்களின் பாரம்பரியக் கலையான பொல்லடி எனும் களிகம்புக் கலையை அழிய விடாது உயிரோட்டம் கொடுத்து வரும் பொல்லடிப் பயிற்றுவிப்பாளர் பல்துறைக்கலைஞரும், ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஸாகிர் மற்றும் சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் ஆகியோரும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.