தேசிய ரீதியில் அறிவிப்பாளர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற களுதாவளை யக்சயன்

( வி.ரி. சகாதேவராஜா)

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ் மொழித் தினப்போட்டியின் அறிவிப்பாளர் போட்டியில் மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையைச் சேர்ந்த பரமேஸ்வரன் யக்சயன் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

இவரை கெளரவிக்கும் நிகழ்வானது அதிபர் க. சத்தியமோகன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இப் போட்டியானது கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.