எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தட்சனகெளரி தினேஸ் தலைமையில் ஆரையூர் ஸ்மைலிங் கிட்ஸ் பகல் பராமரிப்பு நிலையம் மற்றும் பாலர் பாடசாலை அங்குராப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக மடக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் இன்று (23) திறந்து வைத்தார்.
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில்
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு,
உலக வங்கியின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக,
மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் சுமார் 10 மில்லியன் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையம் வைபவ ரீதியாக இன்றய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் நிலையம் இன்மையால் குழந்தைகளை பாராமரிப்பதில் பாரிய சிக்கலை எதிர் நோக்கியிருந்தனர் இதனை தீர்த்து வைக்கும் முகமாக இப்பிரதேசத்தில் குழந்தை பராமரிப்பு நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம பொறியாளர் ரீ.சுமன், மட்டக்களப்பு வலயக்கல்வி உதவி பணிப்பாளர் திருமதி அனுரேகா, மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வி. முரளிதரன், மற்றும் பல உயர் அதிகாரிகள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அதிதிகளினால் பயன் தரு மரங்கள் பாலர் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


