சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் துஆப் பிரார்த்தனை

Oplus_131072

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட துஆப் பிரார்த்தனை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஜம்இய்யத்துல் உலமாவின் சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் தலைவரும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் உதவித் தலைவருமான மௌலவி எம்.எம்.எம். சலீம் (ஷர்க்கி) தலைமையில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டார்.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஷ்இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதியினால் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதோடு, அதிகளவான ஜமாஅத்தார்களும் துஆப் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

இதன் போது நாட்டின் சுபீட்சத்துக்காகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆரோக்கியம் மற்றும் அவரது அயராத சேவையுடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி மற்றும் நியாயமான ஆட்சிக்காகவும் ஜனாதிபதி அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு நாட்டைக் கொண்டு செல்லவும் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.