மட்டக்களப்பு – வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் அனுசரணையில் க.பொ.த உயர் தர கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கருத்தரங்கு தாயக ஊற்று அமைப்பின் தலைவர் கா.இராமச்சந்திரன் தலைமையில் இன்றைய தினம் வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வு கலை கலாசார ரீதியாக முதலில் மங்கள விளக்கேற்றல், மௌன இறை வணக்கம் இடம்பெற்று தொடர்ந்து தாயக ஊற்று அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் உரை, நன்கொடையாளர் கௌரவிப்பு இடம்பெற்று கருத்தரங்கு ஆரம்பமாகியது.
இக் கருத்தரங்கில் வளவாளராக பிரபல இரசாயணவியல் ஆசிரியர் திரு.மயூரன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கருத்தரங்கில் சுமார் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டனர்.
கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களுக்கு கடந்த கால வினாவிடை கையேடுகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தாயக ஊற்று அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ. சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மு.முரளிதரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் திரு.நாகேந்திரன், விஞ்ஞான பிரிவு கல்குடா கல்வி வலய விஞ்ஞானப் பாடப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் திரு.சிவபதி, செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் திரு.சுவர்ணேஸ்வரன், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் திரு.கிருஸ்ணகாந், வந்தாறுமூலை கணேஷ வித்தியாலய அதிபர் திரு.சி.மதிவர்மன், வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய அதிபர் திரு.வேதநாயகம், வந்தாறுமூலை பலாச்சோலை விபுலாநந்த வித்தியாலய அதிபர் திருமதி.கோகிலவாணி, ஆசிரியர்கள், மாணவர்கள், நன்கொடையாளர்கள், தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





