நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றது பொருட்கள் முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு

ருத்திரன்
சுபிட்சத்தை நோக்கி என்ற கருப்பொருளில் நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் இருந்து முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு வல்சி நிறுவனத்தினால் வைபவ ரீதியாக வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.அரசாங்க அதிபர் நேரில் சென்று குறித்த ஏற்றுமதியானது எவ்வாறு இடம்பெறுகிறது என்பதுடன் உணவுப் பொருட்கள் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,பொதி செய்தல் போன்றவற்றை கண்டறிந்து கொண்டார்.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன்,கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம்,உதவிப் பிரதி செயலாளர் திருமதி டிலக்ஷினி சசிதரன,மட்டக்களப்பு காணி ஆணையாளர் என்.விமல்ராஜ்ம் மட்டக்களப்பு கைத்தொழில் அதிகார சபையின் உத்தியோகத்தர் கோபி ஆகியோர்களுடன் வல்சி நிறுவன நிறவனர் ரி.தயாபரன் ரிச்சா நிறுவன நிறுவனர் க.பாஸ்கரன் வல்சி நிறுவன இணைப்பாளர் த.சுரேஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு குறித்த ஏற்றுமதியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
சுமார 15 வகையான பொருட்கள் முதற் தடவையாக ஏற்றுமதி செய்யப்பட்டன.
மரவள்ளிகிழக்கு,தேங்காய்ப்பால், தேங்கா பூ.வெண்டிக்காய்,பயிற்றை,காளான்,நிலக்கடலை,சின்ன வெங்காயம்,வற்றவப் பழ ஜஸ் கிறீம்,முருங்கை இலை,மரவள்ளி இலை என பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் இன்று ஏற்றுமதி செய்யப்பட்டன