நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி

ருத்திரன்
நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி செய்ய்பட்ட உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் இருந்து முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆரம்ப நிகழ்வு வல்சி நிறுவனத்தினால் அண்மையில் வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம்,திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன் ஆகியோர்களுடன் வல்சி நிறுவனத்தின் இணைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.தீபன் ஆகியோர்கள் இதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
சுமார 15 வகையான பொருட்கள் முதற் தடவையாக ஏற்றுமதி செய்யப்பட்டன.
மரவள்ளிகிழக்கு,தேங்காய்ப்பால்,வெண்டிக்காய்,பயிற்றை,காளான்,நிலக்கடலை,சின்ன வெங்காயம்,வற்றவப் பழ ஜஸ் கிறீம்,முருங்கை இலை,மரவள்ளி இலை என பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் ‘வல்சி’ நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தனர்.
‘வல்சி’ நிறுவனமானது தயாக மன்னில் இருந்து பல தரப்பட்ட உற்பத்தி பொருட்களை எமது நாட்டின் பொருன்மிய மேம்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டு அதிகளவு விளைச்சலை தந்தும் சந்தை வாய்ப்புக்கு குறைந்தளவு வருமானத்தை ஈட்டித் தரும் உணவு பொருட்களை கொள்வனவு செய்து அவற்றினை ஏற்றுமதி பொருளாக மாற்றி நளிவுற்ற மக்களின் பொருளாதாரத்தை மாற்றுவதுடன் நாட்டின் பொருளாதர வளர்சிக்கு உறுதுணையாக இருக்கும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வல்சி நிறுவனத்தின் இணைப்பாளர் த.சுரேஸ் இதன்போது கருத்து தெரிவித்தார்.
அத்துடன் இத்திட்டமானது ‘வல்சி’ நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் த.தயாபரனின் நெறிப்படுத்துகையின் கீழ் மட்டக்களப்பில் மாத்திரமில்லாது வடக்கு கிழக்கில் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.