எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் மட்டக்களப்பு
பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு
பிராந்திய ஒருங்கிணைப்பாளர் திருமதி.யதுஷியா முரளி அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (12) திகதி சாட்சி விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டது.
காணமற்போன ஆட்களின் உறவினர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இருந்து வருகை தந்த ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அர்பா தாஷிம் உள்ளிட்டவர்களினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், செங்கலடி – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திலும் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இன்றைய தினம் 66 காணமற்போன ஆட்களின் உறவினர்களினால் சாட்சி விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


