பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பொலிஸ் பரிசோதனை!பரிசோதனை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று (12) பரீட்சிக்கப்படன.

நாடாவியரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சகமும் போக்குவரத்து அமைச்சகமும் இணைந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு பாடசாலை மாணவர் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு
பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் பாதுகாப்பு மற்றும் நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வாகனங்களில் மேலதிகமாக பொருத்தப்பட்டிருந்து உபகரணங்கள் பரிசோதகர்களினால் அகற்றப்பட்டன.

போக்குவரத்து பரிசோதகர்களான ஜே.கே. அழகப்பெரும, நுவன் குளதிலக, போக்குவரத்து பொலிஸ் அலுவலக பொறுப்பதிகாரி ஆர்.கே. செனவிரத்ன, போக்குவரத்து பொலிசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்