சிறுவர்களின் கைதொலைபேசி பாவனையை தடுத்தல் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நாடகம்!

ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட க/கெமுனுபுர வித்தியால மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நாடகச்செயற்பாடின் அனுகுமுறையுடன் மூலமாக நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இன்று (10) இடம் பெற்ற குறித்த நிகழ்வுக்கு
வளவாளராக சமூதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்
பா.ஹம்சபாலன் ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்
B.அஜ்மில்கான் , சிறுவர் பெண்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் போன்றோர்கள் வளவாளர்களாக செயற்பட்டிருந்தனர்.

இவ் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் B. அஜ்மில்கான், சிறுவர் பெண்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.