கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை.

அண்மையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் மாணவர்கள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சம்பவத்தை எதிர்கொண்ட ஒரு மாணவி அளித்த புகாரின் பேரில் ஏறாவூர் காவல்துறையினர் இந்த மாணவர்களைக் கைது செய்தனர்.

9 ஆண் மாணவர்களும் 7 மாணவிகளும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2023ம் ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக பகிடிவதை சம்பந்தமாகவே குறிப்பிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.