100 நாள் செயல்முனைவு – 35ஆம் நாள்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முறை வெற்றிகரமாக முன்னேறி வருகிறது.
இன்று (04/09/2025) 35ஆம் நாளை முன்னிட்டு, திருகோணமலை மாவட்டம் ஆனந்தபுரி பகுதியில் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில்,
“சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு என்றால் என்ன?”
“தமிழ் மக்களாகிய எங்களுக்கு ஏன் அது அவசியம்?”
*
என்பன தொடர்பாக ஆழமான உரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும், பங்கேற்ற மக்களிடமிருந்து கருத்துகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இந்த முயற்சிகள் அனைத்தும், மக்கள் மையமாகக் கொண்டு அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் வலுவான கோரிக்கையை உருவாக்குகின்றன.


