(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலய மாணவன் சுஆத் அப்துல்லாஹ் 141 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவர், ஊடகவியலாளர் எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எஸ்.நூரா தம்பதிகளின் புதல்வராவார்.
பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த மாணவனுக்கும் கற்பித்த ஆசிரியர் ஐ.சபீக் அவர்களுக்கு அதிபர் எம்.எச்.முபாரக் சிறாஜி வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.


