மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் விபத்துக்களில் அங்கவீனமான 58 பொலிஸாருக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டிகள், ஊன்று கோல்கள் போன்றவற்றை பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவியும் பொலிஸ் மா அதிபரின் துணைவியாருமான நில்மினி நீட்டா சமரதுங்க நேற்று முன்தினம் வழங்கி வைத்தார்.

பொலிஸ் சேவா வனிதா இயக்கம் சோழகன் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய விரிவுரையாளர் மண்டபத்தில் நேற்று முன்தினம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித்த லீலாரத்ன தலைமையில் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவியும் பொலிஸ் மா அதிபரின் துணைவியாருமான நில்மினி நீட்டா சமரதுங்க, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, அமைப்பின் அனுசரணையாளர்கள் மற்றும் மட்டு மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்ட அதிதிகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனமான பொலிஸாரின் வாழ்வைக் கட்டியெழுப்புவது எனும் தொனிப் பொருளில் முதற்கட்டமாக 58 பேருக்கு நாச்சக்கரவண்டிகள், ஊன்றுகோல்கள் மற்றும் மருத்துவச் செலவுக்கான பண உதவிகளை வழங்கி வைத்தனர்.