ஹஸ்பர் ஏ.எச்_
இலங்கை நிருவாக சேவை மற்றும் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை ஆகிய துறைகளுக்கு அண்மையில் தெரிவாகியவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (29) அன்று மூதூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை கல்வி நிருவாக சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.ஜே.எம். ஜாரீஸ் (SLEAS) ,என்.எம். றிழ்வான் (SLTES) மற்றும் எச்.எம்.ஹூஸ்னா (SLTES) ஆகியோர் இந்நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வானது ஜே.யூ.
ஆர் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ்.ஜே.எம்.ரிபாத் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் அல்ஹாஜ் எம்.சீ.எம்.சரீப் (EX-SLAS) அவர்களின் தலைமை உரையுடன் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மூதூர் வலய கல்வி பணிப்பாளர் ஏ.எல். சிராஜ் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


