பொலன்னறுவை மாவட்ட விவசாய சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் நேற்றைய தினம் (30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் பொலன்னறுவையில் அமைந்து காணப்படும் துன்ஹித ஹோட்டலில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இங்கு, விவசாயிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூடியிருந்த விவசாயிகள் மத்தியில் வாக்குறுதி வழங்கினார்.


