மூன்றாம் காலாண்டு கணக்காய்வு குழுக்கூட்டம்- கோறளைப்பற்று வாழைச்சேனை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு குழுக்கூட்டம் நேற்று முன்தினம் (26) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணி அளவில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமானது. இதில் உதவி பிரதேச செயலாளர் திருமதி டிலக்சினி சசிதரன், கணக்காளர் திருமதி தயானி சசிகுமார் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி புனிதநாயகி ஜெயக்குமார், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ எஸ் சசிகரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

முன்னைய கணக்காய்வு குழுக்கூட்டம் தொடர்பான ஆமோதித்தலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஒவ்வொரு கிளை சார்ந்த செயற்பாடுகளின் முன்னேற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இதன் போது பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ. எஸ் சசிகரன் அவர்களால் பல காத்திரமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.