நவீன முறையில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான கருத்தரங்கு

எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் நவீன முறையிலான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விதம் தொடர்பில் கருத்தரங்கொன்று அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்றது.

உலக வங்கியின் “Gem project” திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு வளவாளராக, கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஆங்கிலப் பாட இணைப்பாளர் ஏ.எல்.எம். ஆரீப் கலந்து சிறப்பித்தார்.

தற்காலத்தில் மாணவர்கள் எவ்வாறு நவீன முறையிலான கற்றல்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பிலும், அவற்றிற்கு பயன் படுத்தக்கூடிய மென்பொருள், செயலிகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் போன்றவைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விளக்கங்களையும் செயன்முறைமூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.

மேலும், நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் மௌலவி எம்.ரீ.ஏ.முனாப் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.