விவசாய நவீன மயமாக்கல் திட்டத்திற்கான பட்டியல்தொடர்பான கூட்டம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் பட்டியல் படுத்தப்படாத கம்பனிகளின் செயல்பாட்டு மற்றும் கண்காணிப்புக் தொடர் தொடர்பான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (26) நடைபெற்றது.

உலக வங்கியின் 89,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவியின் கீழ் விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட விவசாய நவீன மயமாக்கல் திட்டம் விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தல் மற்றும் விவசாயிகளை தமது விவசாயத்தில் ஸ்திரத்தன்மையுடன் பேணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 10 பட்டியல் படுத்தப்படாத கம்பனிகளில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் பங்களிப்புச் செய்யும் குறித்த திட்டத்தின் விவசாயிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மாதுளை, பச்சை பிபிங்கா, நிலக்கடலை, சோளம், வாழை போன்ற செயல்களில் ஈடுபடும் விவசாயிகள் வழங்கப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் நிலைத்திருக்கும் நிலைமைகள் தொடர்பாக குறித்த கம்பெனிகள் தெளிவு படுத்தின.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் விவசாய வணிகங்கள் பணிப்பாளர் எம். ஜி. அஜித் புஷ்பகுமார, தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகாரசபை பிரதிப் பணிப்பாளர் வசந்த சேனாநாயக்க, விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் இணப்பாளர் உபுல் ஜயவர்த்தன, உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். நிர்மலன், தேசிய தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட இணைப்பாளர் சிவகுமாரி செல்வராசா மற்றும் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் சகல பட்டியல் படுத்தப்படாத கம்பனிகளின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.