35 வருடங்களுக்குப் பின்னர் பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அரச நிதியின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட சம்மாந்துறை, கூட்டுறவு கிராமிய வங்கி கட்டிடத்தினை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வும் மண்ணெண்ணெய் மீள்விநியோக அங்குரார்ப்பணம் மற்றும் புதிய பம்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (25) திங்கட்கிழமை MPCS வளாகத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை, சம்மாந்துறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ. மஃமூதுலெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது பொது மக்களுக்கு 35 வருடங்களுக்குப் பின்னர் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி நிகழ்வில் சிறப்பு அதிதியாகவும், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான பீ. தனேஸ்வரன், சம்மாந்துறை, பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, கல்முனை, கூட்டுறவு அபிவிருத் அபிவிருத்த உதவி ஆணையாளர் எம்.சி. ஜலால்தீன் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.கே.பீ.எஸ். தேவபிரிய ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.