தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மகளிர் மேம்பாட்டு கள உதவியாளராகப் பணியாற்றி வரும் முஹம்மத் அஸாத் நஸ்ரின் திலானி அவர்கள், அரச அங்கீகார மொழிபெயர்ப்பு பரீட்சையில் சித்தியடைந்து, நேற்றைய தினம் மாவட்ட பதிவாளர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டு, அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராக (தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம்) நியமிக்கப்பட்டார்.
முன்னதாக கந்தளாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய நஸ்ரின் திலானி அவர்கள், சிறந்த ஆளுமை மற்றும் ஆற்றல் மிக்க பெண் அரச பணியாளர் ஆவார். வளவள மேம்பாட்டில் ஈடுபட்டு, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக சேவையில் சிறப்பாக பங்களித்து வருகின்றார்.
அவர் கந்தளாய் தி/பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலையின் பழைய மாணவியும், அதே பாடசாலையின் முன்னாள் ஆசிரியை மறைந்த மர்ஹும் மர்ஜானி அவர்களின் புதல்வியும் ஆவார்.


