(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், நாகூர் ஆண்டகை தர்கா நம்பிக்கையாளர் சபை மற்றும் இறைவெளி கண்ட விவசாய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அறுவடை நிய்யத் நிகழ்வு” (17) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் எம்.அஸீஸ் ஹாஜி, மௌலவி சபா முஹம்மது (நஜாஹி), பள்ளிவாசல் நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் தாங்கள் அறுவடை செய்யும் நெல் கொண்டு செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளதாலும் வாகனங்கள் செல்வதில் பாரிய பிரச்சினை உள்ளதாலும் அதனை சீர் செய்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவிடம் விவசாயிகள் மகஜர் ஒன்றை கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.


