வரலாற்றுச் சிறப்பு மிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2025 வருடாந்த எசல பெரஹெரவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றிரவு கலந்து கொண்டார். புனித கலசத்தை யானை மீது வைத்து வீதி உலாவை ஆரம்பித்து வைத்ததோடு, இவ்வருடத்துக்கான வருடாந்த புண்ணியதான நிகழ்வுகளையும் பெரஹெர நிகழ்வுகளையும் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு ஆரம்பித்து வைத்தார்.
75 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில ராஜமஹா விஹாரையின் எசல பெரஹெர இந்த வருடமும் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பின்னர் பெல்லன்வில ரஜமஹா விகாரை விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டு, அவரது ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.



