75 ஆண்டுகள் வெற்றி வரலாறு நடை பவனி விபுலத்தால் ஒன்றிணைந்துயர்வோம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும்

பாறுக் ஷிஹான்

விபுலத்தால் ஒன்றிணைந்துயர்வோம் எனும் தொனிப்பொருளில் விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75 ஆண்டுகள் வெற்றி வரலாறு நடை பவனி சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் தொடர்பில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (13) மாலை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவள விழாவினை முன்னிட்டு நடை பவனி ஏற்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எமது காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி 1950 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தி செய்து இருக்கின்றது. அதனை கொண்டாடும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .ஆரம்பத்தில் எமது பழைய மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றன.அத்துடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததான முகாம் செய்யப்பட்டிருந்தது.பின்னர் தற்போது நாங்கள் நடை பவனியை ஏற்பாடு செய்து இருக்கின்றோம்.

இச்செயற்திட்டங்கள் யாவும் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் இந்த ஏற்பாடுகளை நாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றொம்.மத்திய கல்லூரியில் இதுவரை 24 அதிபர்கள் கடமையாற்றி இருக்கிறார்கள் .கடந்த காலத்தில் ஒரு ஓலை குடிசையில் உருவாகிய எமது விபுலானந்தா மத்திய கல்லூரி இன்று பெரும் விருட்சமாக வளர்ந்து இன்று இந்த நிகழ்வுகளை நடத்தக்கூடிய நிலையில் உள்ளது.

அத்தடன் இதுவரை எமது கல்லூரி பல்வேறு சாதனைகளை அடைந்திருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.எனவே எதிர்வரும் ஆகஸ்ட் 16 ஆந் திகதி நடைபெற உள்ள நடை பவனியை சிறந்த முறையில் மேற்கொள்ள சகல தரப்பினரும் ஒத்தழைபபுகளை வழங்க முன்வர வேண்டும்.என்றார்.

இச் செய்தியாளர் சந்திப்பில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஆலோசகர் சகா தேவராஜாவும் இணைந்து இருந்தார்