காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

பாறுக் ஷிஹான்

காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன் ஏற்பாட்டில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினறும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமாகிய அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் செவ்வாயக்கிழமை(29 ) காரைதீவு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ் உதுமான் லெப்பை, எம்.எஸ் அப்துல் வாஸித், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ,பிரதித் தவிசாளர் எம்.எச்.எம்.இஸ்மாயில், பிரதேச சபை உறுப்பினர்கள், உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள், முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியோக செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .