உணவு ஒவ்வாமை காரணமாக 50க்கும் மேற்பட்டோர்கள் பாதிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_

கிண்ணியா பிரதேச சகல உணவகங்களும் பரிசோதனை இடம் பெற்று வருவதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று (24)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 21 ம் திகதி கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு நேர சாப்பாடாக உட்கொண்ட பரோட்டா,ம
யோனஸ்,சுட்ட கோழி சாப்பிட்டவர்களில் அடுத்த நாள் காலையில் தலைசுற்று, வாந்திபேதி, காய்ச்சல் என அறிகுறி தென்பட்டது உணவு ஒவ்வாமை காரணமாக கிண்ணியா தளவைத்தியசாலையில் 39 பேரும், மூதூர் 05, குச்சவெளி 05 என 49 நபர்களும் தனியார் மருந்தகங்களில் 20 பேர்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அதே கடையில் உட்கொண்டவர்களாவர். தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு தேரி வருகின்றனர். இதில் கிண்ணியாவில் 03 சிறுவர்களும், மூதூரில் 2 சிறுவர்களும் உள்ளடங்குவர் ஒரே குடும்பத்தில் ஆறு பேர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர் .இதனை தொடர்ந்து குறித்த உணவகத்தை எங்கள் குழுவினர் சென்று உணவு மாதிரிகளை கொழும்பு MRI க்கு அனுப்பியுள்ளோம் இந்த முடிவுகளுக்காய் காத்திருகுகிறோம் இருந்தபோதிலும் உணவு ஒவ்வாமை ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது. உணவகங்களில் இவ்வாறான தவறு வரக் கூடாது என பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன் முன்னரும் நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவே பொது மக்கள் இவ்வாறான உணவுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மேலும் கூறினார்.