எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திருமதி ச. கோணேஸ்வரன் ஏற்பாட்டில் இன்று (23) புதிய மாவட்ட செயலக வளாகத்தில் வழங்கிவைத்தார்.
அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக எம்.ஜே.எப் நிறுவனம் மற்றும் கனடிய நிதி உதவியுடன் பாரி அறக்கட்டளையினரின் அனுசரணையுடன் மாவட்டத்தில் விசேட தேவைக்குரியவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் 8959 விசேட தேவைக்குரிய நபர்கள் காணப்படுவதுடன் இவர்களில் 5 வயது முதல் 35 வயதிற்குற்பட்ட பல்வேறு வகையான அங்கவீனமுற்றவர்களாக 2691 நபர்கள் காணப்படுகின்றனர்.
மேலும் மாவட்ட அரசாங்க அதிபர் விசேட தேவைக்குரிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் எம்.ஜே.எப் நிறுவன நிகழ்சி திட்ட இணைப்பாளர் திருமதி சபிக்கா மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


