கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியில் “Red Day” நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதியாக இயங்கிவரும் கிரீன்விச் பாலர் பாடசாலையின் “Red Day” நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கல்முனை வலய பாலர் பாடசாலைப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஐ.எல். முகம்மட் அனீஸ் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் சிவப்பு நிறத்திலான அலங்காரங்களும் மற்றும் உணவுப்பண்டங்களும் தயாரிக்கப்பட்டு, மாணவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.